இலங்கை
ஏழரையின் பிடியில் இலங்கை!!
ஏழு மூளை உள்ளவரின் செயற்பட்டவரால் நாட்டுக்கு ஏழரை பிடித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
நாட்டைப் பாதுகாப்பதற்காக அதிகாரத்தைக் கோரியவர்கள் தற்போது நாட்டை வெளிநாடுகளிடம் அடகு வைத்துள்ளனர் என்றும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று பிற்பகல் எண்ணெய் தாங்கிகள் அமைந்துள்ள சீனக்குடாவில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
1924 ஆம் ஆண்டு எண்ணெய் தாங்கிகளின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1930 அளவில் 101 எண்ணெய் தாங்கிகளும் பூரணமாக நிர்மாணிக்கப்பட்டன.
சிட்னியை அடுத்து இரண்டாவது ஆழமான இயற்கை துறைமுகமாக திருகோணமலை துறைமுகம் காணப்படுவதால் துறைமுகத்தை அண்டிய பகுதியில் இவை நிர்மாணிக்கப்பட்டன.
இதில் ஒரு தாங்கியில் 12000 டொன் எண்ணெய் சேமிக்க முடியும் மொத்தமாக 1.2 மில்லியன் டொன் எண்ணெய் இதில் சேமிக்க முடியும். இதில் 15 தாங்கிகள் ஏற்கனவே 2004 இல் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவிட்டன.
இப்படிப்பட நிலை காணப்படும் போது, இன்று அமெரிக்க பிரஜைகள் சுகபோக வாழ்க்கையினை வாழும் போது, நமது நாட்டு மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழு மூளை உள்ளவரின் செயலால் நாட்டுக்கு ஏழரை பிடித்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login