இலங்கை

புதிய வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீட்டை ஏற்க முடியாது: கொதித்துப்போன வியாபாரிகள்

Published

on

சங்கானை மரக்கறி சந்தை வியாபாரிகள் மற்றும் வெற்றிலை சந்தை வியாபாரிகள் ஆகியோர் இணைந்து இன்று (07) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இதனால் சந்தை நடவடிக்கைகளும் முற்றுமுழுதாகப் பாதிப்படைந்ததுள்ளது.

திடீர் வரியேற்றம் மற்றும் பிரதேச சபையினர் உள்ளக சுற்றுப்புறத்தைக் கண்காணிக்காமை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வியாபாரிகள்,

எமது சந்தையிலிருந்து கொரோனா நிலைமையின் காரணமாக வெற்றிலை மற்றும் பழக்கடை என்பவற்றினை பழைய மீன் சந்தை பகுதிக்கு இடமாற்றம் செய்திருந்தனர்.

தற்போதைய நிலைமையில் பிரதேச சபையினர் எமது இடங்களில் புதிய வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக பிரதேச சபையின் அனுமதியுடன் குத்தகையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

நாங்கள் 25 வருடங்களுக்கு மேலாக குறித்த இடத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

எங்களுக்கு இந்த இடத்தினை மாற்றம் செய்து புதிய வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்வது என்பது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று சுகாதாரப் பகுதியினர் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று நிலைமைக்கு ஏற்ற வகையில் எங்களை புதிய இடங்களுக்கு அனுமதிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரதேச சபையினர் தற்போது உள்ள இடங்களில் புதிய வியாபாரிகளுக்கு இட ஒதுக்கீடு செய்கின்றனர்.

இதனால் தற்போது பாதுகாப்பற்ற தரமற்ற கழிவுகள் கொட்டப்படுகின்ற இடத்தில்தான் எமது வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது என்றும் வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நுளம்பு, வெயில் ஆகியவற்றால் மிகவும் கடும் அவதிப்படுகிறோம். குறித்த பிரதேசம் துர்நாற்றம் வீசுகின்றமையால் மக்கள் குறித்த இடங்களுக்கு வந்து பொருட்களை கொள்வனவு செய்வதில் மந்த நிலை காணப்படுகின்றது எனவும் கூறியுள்ளனர்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version