இலங்கை
அரசை விமர்சித்ததால் பதவி நீக்கமா..? டளஸ் விளக்கம்
ஜனாதிபதி நினைத்தால் என்னையும் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.” – என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது,
” அரசை விமர்சித்ததால் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார். அரசை விமர்சிப்பதற்கு ஆளுங்கட்சியில் உள்ளவர்களுக்கு தடையா” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
” நான் இந்த ஊடக சந்திப்புக்குவரும் வழியில்தான் அது தொடர்பில் அறிந்தேன். அரசமைப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே ஜனாதிபதி அந்த முடிவை எடுத்துள்ளார்.
இது கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. சுசில் பிரேமஜயந்த எனது நண்பர். நானும் கவலை அடைகின்றேன். ஜனாதிபதி நினைத்தால் என்னையும் நீக்கலாம்.
அரசை விமர்சித்ததால்தான் அவர் நீக்கப்பட்டார் எனக் கூறப்படுவதை ஏற்கமுடியாது. தற்போதைய அமைச்சரவையில் சுதந்திரம் இருக்கின்றது. கம்மன்பில போன்றவர்கள் நீதிமன்றத்தைக்கூட நாடியுள்ளனர்.” – என்றார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login