இலங்கை

08 ஆம் வகுப்பா படித்தீர்கள்: ஊடகவியலாளரைப் பார்த்துக் கேட்ட அதிபர்!

Published

on

8 ஆம் வகுப்புப் படித்தீர்களோ தெரியவில்லை என ஊடகவியலாளர்களை பார்த்து அதிபர் கேட்டமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களைப் பார்த்து, 8ஆம் வகுப்பு வரைக்கும் படித்தீர்களோ தெரியவில்லை என தேசிய பாடசாலை திட்டத்தினுள் உள்வாங்கப்பட்ட, காரைநகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கூட்டம் இன்று (30) நடைபெற்றது. அதற்காக ஊடகவியலாளர்கள் பிரதேச சபைக்கு சமூகமளித்திருந்தனர்.

அப்போது, அவ்விடத்திற்கு வந்த குறித்த பாடசாலையின் அதிபர் “கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாணவர்கள் பாடசாலைக்கு வெளியில் நின்றமை தொடர்பான செய்தி பத்திரிக்கைகளிலும் இணையத்தளங்களிலும் நீங்களா பிரசுரித்தீர்கள்” எனக் கேட்டார்.

அதற்கு பதில் வழங்கிய ஊடகவியலாளர்கள்

குறித்த செய்தி தொடர்பான விபரங்கள் தேவைப்படின் அந்த ஊடக நிறுவனங்களிடம் விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த அதிபர் ஊடகவியலாளர்களை நோக்கி “நீங்கள் புலனாய்வாளர்கள் போல் பாடசாலைக்குள் நுழைந்தீர்கள், நீங்கள் புலனாய்வாளர்களா? 8ஆம் வகுப்பு வரைக்கும்தான் கல்வி கற்றுள்ளீர்களா என தெரியவில்லை எனக்கூறினார்.

இதன்போது அதிபர் தனது கையடக்க தொலைபேசி மூலம் புகைப்படமும் எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊடகவியலாளர்கள், “வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தருகின்றோம், நீங்கள் இது தொடர்பாக அவரிடம் கூறுங்கள்” எனக்கூறி தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ள முயற்சித்தவேளை அதிபர் அங்கிருந்து நழுவிச் சென்றார் என ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவனுக்கு ஊடகவியலாளர்கள் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version