இலங்கை

அரிசி தட்டுப்பாடா? : பந்துல கூறிய உண்மை!

Published

on

நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பு, புறக்கோட்டை பகுதிக்கு இன்று (29) கண்காணிப்புப் பயணமொன்றை மேற்கொண்ட அமைச்சர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.

” விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்காகவே, அரிசிக்கு தட்டுப்பாடென திட்டமிட்ட அடிப்படையில் வதந்தி பரப்பட்டுவருகின்றது.

புறக்கோட்டையில் இருந்துதான் அரிசி விநிநோயகம் செய்யப்படுகின்றது. இங்கு போதுமானளவு உள்ளது. பிரதமரும் இது தொடர்பில் என்னிடம் வினவினார். அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை.

அதேபோல துறைமுகத்தில் தேங்கியிருக்கும் அரிசி கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர்கள் வழங்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். அந்த தொகையும் சந்தைக்கு வந்த பிறகு அரிசி விலை குறையும்.” – என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version