இலங்கை

வெளிநாடுகளை வரவேற்கத் தயார்- டக்ளஸ்

Published

on

அபிவிருத்தி செய்வதற்கு வெளிநாடுகள் வரும்போது, நாட்டிற்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஏனெனில் அபிவிருத்தி செய்வதற்கு எம்மிடம் நிதி வசதிகள் இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழுள்ள விவசாயிகளின் பிரச்சனை மற்றும் பல்வேறுபட்ட மாவட்டத்தின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (28) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற பின், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தின் கீழ் உள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக உழவர் சந்தை அவசியம் தேவை என்பதைக் கூறினார்லள்.

அதனை நடைமுறைப் படுத்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி கௌதாரிமுனைப் பகுதியில் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்குரிய காணி வழங்குவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இக்கேள்விக்குப் பதில் வழங்கிய அமைச்சர்,

யாருக்கும் அவ்வாறு காணிகள் வழங்கப்பட வில்லை. எங்களை அபிவிருத்தி செய்வதற்கு நிதி வசதிகள் இல்லை. வெளிநாடுகள் வரும்போது நாட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் யார் வந்தாலும் வரவேற்போம் என்றார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version