இலங்கை

கோழி இறைச்சி, முட்டை விலைகளில் மாற்றமா?

Published

on

இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கியுள்ளமையால், முட்டையின் விலை மேலும் அதிகரிக்காது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால், முட்டை உற்பத்தி செலவு குறைந்துள்ளது. அத்துடன் இந்த நாட்களில் ஒரு முட்டையின் விலை 23 ரூபா 50 சதத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை கோழி இறைச்சியின் விலையை சுமார் 50 ரூபாவினால் குறைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது ஒரு முட்டை 26 ரூபாவிலிருந்தும் 30 ரூபாவுக்கும், ஒரு கிலோ கோழி இறைச்சி 800 ரூபாவிலிருந்து 900 ரூபாவிற்கும் விற்பனையாகின்றமை குறிப்பிடத்திக்கது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version