இலங்கை

நாளை முதல் சிறப்பு நிவாரணப் பொதி விநியோகம் ஆரம்பம்!

Published

on

சதொச நிறுவனத்தினால் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வழங்கப்படவுள்ள நிவாரணப் பொதி சார்ந்த தகவல்களை இன்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டார்.

ரூபாய் 2,751 மற்றும் 2,489 க்கு சந்தையில் சில்லறை கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை சதொசவில் 1998 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். குறித்த பொதிகளை பதிவு செய்வதன் மூலம் வீடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

இப்பொதியை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கு 1998 என்ற இலக்கத்தினை அழைப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோன்று 0115 201 998 என்ற வட்ஸ்அப் எண்ணின் மூலமும் பதிவினை மேற்கொள்ள இயலும்.

இவ் பொதிகள் விநியோகம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதியில் 10 கிலோ சம்பா அரிசி, 2 கிலோ பழுப்பு சீனி, 1 பக்கெட் நூடுல்ஸ், 100 கிராம் தேயிலை பக்கெட், 250 கிராம் நெத்தலி, 2 சவர்க்காரக் கட்டிகள் மற்றும் 1 பக்கெட் பப்படம் ஆகியவை நிவாரண பொதியில் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version