இலங்கை

எனக்கு உரையாற்ற நேரம் போதாது: நேரத்தை தாருங்கள் சபையில் இராதா எம்பி!

Published

on

எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரான மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணனுக்கு ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலிருந்து மூன்று நிமிடங்களை வழங்குவதற்கு ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சம்மதம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி நாள் விவாதத்தில் உரையாற்றுவதற்கு இராதாகிருஷ்ணன் எம்.பிக்கு எதிரணி 4 நிமிடங்களை ஒதுக்கியிருந்தது.

இராதாகிருஷ்ணன் எம்.பி. உரையாற்றிக்கொண்டிருக்கையில்,

‘இன்னும் இரண்டு நிமிடங்கள்தான் உள்ளன’ – என்று சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டினார்.

” இப்போதுதான் உரையாற்றவே ஆரம்பித்தேன். அதற்குள் நேரம் முடிந்துவிட்டதா? இந்த நேரம் எனக்குபோதாது, மேலதிக நேரத்தை தாருங்கள். ஆளுங்கட்சியில் இருந்தாவது நேரத்தை பெற்று தாருங்கள்.” – என்று ராதா கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மூன்று நிமிடங்களை ராதாவுக்கு வழங்குவதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இணக்கம் தெரிவித்தார்.

தனது உரையின் முடிவில் இதற்காக ஆளுங்கட்சிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version