செய்திகள்
படகு விபத்து! – கிண்ணியா மேயர் விளக்கமறியலில்
கிண்ணியா நகர சபை மேயருக்கு எதிர்வரும் டிசெம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கிண்ணியா – குறிஞ்சாங்கேணி பகுதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகரசபை மேயர் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்க விசாரித்த நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login