செய்திகள்

பொங்கியெழுந்த பெண் தரையில் அமர்ந்து போராட்டம்

Published

on

நாட்டில் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் மிக நீண்ட வரிசையில் பெற்றோலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.

இந்தநிலையில் தனக்கு எரிவாயு வழங்கப்படவில்லை எனக் கூறி பெண் ஒருவர் வாத்துவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

எரிவாயு கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் பாரவூர்தியொன்றை வழிமறித்து, தரையில் அமர்ந்து போராட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளார்.

எரிவாயுக் கொள்கலன் கையிருப்பு இல்லை என, எரிவாயு விநியோக நிலைய உரிமையாளர் குறித்த பெண்ணிடம் கூறியதாகவும் இருப்பினும் ஏற்க மறுத்த அவர், பாரவூர்தியை வழிமறித்து போராடியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த வாத்துவ பொலிஸ் எரிவாயு விநியோக முகவர், அந்த பெண்ணுக்கு எரிவாயு வழங்குவதாக உறுதி வழங்கியதன் பின்னர் அவர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டிருந்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதன் மூலம் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என நேற்று அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று விரிவாக ஆராயப்பட்டது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறைந்தது 50 நாட்களுக்காவது மூட வேண்டியிருக்கும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்தார்.

இதனடிப்படையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version