செய்திகள்
ஜெ 222 கிராம சேவகர் பிரிவிலும் பல குடும்பங்கள் பாதிப்பு
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, இளவாலை வடமேற்கு ஜெ 222 கிராம சேவகர் பிரிவில் சீரற்ற காலநிலையால் 26 குடும்பங்களை சேர்ந்த 96 நபர்கள் இரண்டு இடைந்தங்கல் முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளர்.
குறித்த பகுதிக்கு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
அத்தோடு இராணுவத்தினரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள் மற்றும் மக்களை சென்று பார்வையிட்டுள்ளனர்.
மேலும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
You must be logged in to post a comment Login