இலங்கை

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

Published

on

இதுவரையில் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசு தீர்மானித்துள்ளது.
அத்துடன் அதிகரித்துள்ள அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரிசி இறக்குமதியை செய்ய தீர்மானம் செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக்குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன இந்தத் தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்

இன்றுமுதல் வெள்ளைச் சீனி கிலோ ஒன்றின் மொத்த விலையை 135 ரூபா முதல் 140 ரூபா வரை விற்பனை செய்யவும் சில்லறை விற்பனையில் 150 ரூபா வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தில் 976 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தேங்கியுள்ளன.
இந்த நிலையில் இஅந்தக் கொள்கலன்களை விடுவிக்க 16 மில்லியன் மெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது.

இ்ந்த நிலையில் சீனி கொள்கலன்களை விடுவிக்க வெளிநாட்டு இருப்புக்கள் வழங்க நிதி அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#srilanka

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version