செய்திகள்
தரம் 5, சாதாரணதர, உயர்தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு
பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைக்கு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய வகுப்புக்களுக்கான பரீட்சைகளுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி முதல் 2022 ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login