செய்திகள்
சுமந்திரன் சுட்ட தோசை – உண்டு மகிழ்ந்த மீனவர்கள்!!!!!
இந்திய மீனவர்களின் பிரச்சனை தொடர்பாகவும், அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தலைமையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
றோலர் தொழிலிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் எதிரொலியாக குறித்த சந்திப்பு இன்றைய தினம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல், மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனின் ஒழுங்குபடுத்தலில் மீனவர்கள் சார்பான பிரதிநிதிகள் N.V. சுப்பிரமணியம் – தலைவர் வடமாகாண கடல் தொழிலாளர் இணையம், J. பிரான்சிஸ் – உப தலைவர் வடமாகாண கடல் தொழிலாளர் இணையம், A.மரியராசா-பொருளாளர் வடமாகாண கடல் தொழிலாளர் இணையம், அன்ரனி யேசுதாஸன் – தேசிய மீனவர் நல்லிணக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர்,V.அருள்நாதன் -தலைவர் முல்லைத்தீவு அண்னை வேளாங்கண்ணி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் ஆகியோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்திலும் மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது வீட்டில் தோசை சுட்டு வழங்கிய படங்கள் மற்றும் காணொலி தற்போது வெளியாகியுள்ளன.
#SriLankaNews
You must be logged in to post a comment Login