இலங்கை

குமுறலை வெளிப்படுத்துவதை விட வெளியேறுவதே துணிகரம்– காமினி லொக்குகே கொதிப்பு

Published

on

உள்ளே இருந்து உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துவதைவிட, அரசிலிருந்து வெளியேறிவிட்டு துணிகரமாக கதைப்பதே மேல்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், அமைச்சருமான காமினி லொக்குகே தெரிவித்தார்.

‘மக்கள் சபை’ எனும் தொனிப்பொருளின்கீழ் அரச பங்காளிக்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ சிலர் ஜனாதிபதியாக வேண்டும், தலைவராக வேண்டும் என்ற எதிர்கால ஆசையில் மக்களை குழப்பும் வகையில் கருத்துகளை முன்வைக்கின்றனர். அரசில் இருந்துகொண்டு எதிரணியின் வேலையை செய்வதற்கு முற்படுகின்றனர். அவ்வாறானவர்கள் அரசியிலிருந்து வெளியேறி விமர்சிப்பதே மேல். வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.” – என்றார்.

அதேவேளை, மொட்டு கட்சியின் மேலும் சில உறுப்பினர்களும் பங்காளிக்கட்சிகளை அரசிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version