இலங்கை

ஆரம்பமானது மீனவர்களின் பாரிய கண்டன போராட்டம்

Published

on

இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து பாரிய கண்டண போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

மீனவர்களின் போராட்டமானது இன்று காலை 07.00 மணிக்கு முல்லைத்தீவில் ஆரம்பமாகிய படகுகளில் மூலம் பருத்தித்துறை நோக்கி செல்கின்றது.

இலங்கையில் இழுவைப்படகு தடைச்சட்டத்தினை அமுல்படுத்த கோரி கடல் வழியான படகு பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

மேலும் கடல் வளத்தினையும்,நீரியல் வளத்தினையும் அழிக்கும் இழுவை படகுகளை தடைசெய்யும் 11 ஆம் இலக்க சட்டம் 2017 ஆம் ஆண்டு இலங்கை அரசால் கொண்டுவரப்பட்டது.

ஆனினும் இந்த சட்டத்தை இன்னமும் அமுல்படுத்தபடவில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென இலங்கையின் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சரையும் கோரும் முகமாகவே குறித்த கடல்வழி படகு பேரணி இடம்பெற்றுவருகிறது.

இப் பேரணிக்கு பல்வேறு அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளது.

அத்தோடு பல அரசியல் பிரமுகர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version