இலங்கை
புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு விரைவில்
புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் இவ்வருடத்துக்குள் வெளியிடப்படும் – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ புதிய அரசமைப்புக்கான வரைவு நகலை தயாரிப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவால் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.
அந்த குழுவானது அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் என பல தரப்புகளுடனும் சந்திப்புகளை நடத்தி ஆலோசனைகளையும், யோசனைகளையும் பெற்றது.
இதன்படி ஆரம்பக்கட்ட வரைவு நகல் இவ்வருடத்துக்கு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவிடம், நிபுணர்கள் குழுவால் கையளிக்கப்படும்.
அதன்பின்னர் பரந்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் புதிய அரசமைப்பு இயற்றப்படும். என்றார்.
அதேவேளை, புதிய அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவும் வழங்கியுள்ளார்.
You must be logged in to post a comment Login