இலங்கை

எதிர்க்கட்சி – ஆளும்கட்சி நடுவீதியில் மோதல்

Published

on

நாவலப்பிட்டி ஜயதிலக மைதானத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற நடைபாதை தொடர்பில் கண்காணிக்க அங்கு வருகை தந்த எதிர்க்கட்சி மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே இன்று கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நடைபாதை 20 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருகிறது எனவும் இதனைப் பார்வையிட நகர சபையின் முன்னாள் தவிசாளர், ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர், நாவலப்பிட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் எனப் பலர் அங்கு வந்திருந்தனர்.

எனினும் மைதானத்துக்குள் நுழையும் பிரதான வாயில் நகர சபையால் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் மைதானம் அருகில் காத்திருந்தனர்.

இந்த நிலையில் நாவலப்பிட்டி நகர சபை தற்போதைய தவிசாளர் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்த போது இருதரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பு மோதலாக மாறியுள்ளது.

இவர்களின் அடிதடியை கட்டுப்படுத்த அங்கு பொலிஸார் வருகை தந்ததன் பின்னரும் கூட இரு தரப்பினரிடையே மோதல் தொடர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version