இலங்கை
பண்டோரா ஆவணம் அம்பலப்படுத்திய ரகசியங்கள்! – ராஜபக்ச குடும்ப உறுப்பினரும் சிக்கினார்
உலகளவில் இரகசிய ஒப்பந்தங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பண்டோரா ஆவணம் வெளிப்படுத்தியுள்ள நிலையில், ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவரும் சிக்கியுள்ளதாக தகாவல்கள் வெளியாகியுள்ளன.
பண்டோரா ஆவணம் வெளியிட்ட இரகசிய தகவல்களில் இலங்கை உட்பட 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அரச அதிகாரிகளின் மறைக்கப்பட்ட சொத்து விபரங்கள் வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமகால மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் அரச தலைவர்கள் உட்பட 35 உலகத் தலைவர்களின் இரகசிய விவகாரங்கள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சுமார் 11.9 மில்லியன் ஆவணங்களை பண்டோரா ஆவணம் வெளியிட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பில்லியனர்கள் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் பெயர் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நிருபமா ராஜபக்ச இலங்கையின் சமகால ஆட்சியாளர்களான ராஜபக்ஷ சகோதர்களின் நெருக்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட நிருபமா 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரை நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் பிரதி அமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிருபமா தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்…
You must be logged in to post a comment Login