இலங்கை

பயங்கரவாத தடுப்புச் சட்டம் உடன் திருத்தப்படும்! – ஜனாதிபதி உறுதிமொழி

Published

on

சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசு வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உருவாகாத பழைமை வாய்ந்த வலய நாடாகவும் ஜனநாயக நாடாகவும் இலங்கை விளங்கும். அத்துடன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் உடன் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

மேலும் இலங்கைக்குள் ஜனநாயக விதிமுறைகளுக்கு அமையவே பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுத் தரப்படும்.

இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை தனது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் நாட்டில் நிலவும் போர் காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி போன்றே ஜனநாயகமும் நிலைநாட்டப்பட முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

பயங்கரவாதத் தடுப்பு சட்டம் தொடர்பில் அவதானம் செலுத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் காலத்தை முன்னிலைப்படுத்தி தீர்வொன்றின் தேவை தொடர்பில் ஜனாதிபதிக்கு வலியுறுத்தியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் தம்முடைய விஜயத்தின்போது தாம் ஆராய்ந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்கவுள்ளோம் எனவும் இலங்கைக்கு தமது ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர்.

தேவையான குழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றின் அறிக்கைகளுக்கு அமைய நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் காணப்படும் திருத்தப்பட வேண்டிய உறுப்புரைகளை திருத்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version