இலங்கை

அப்பாவிப்பொதுமக்களின் நிலங்கள் சூறையாடப்படுகின்றன – எதிர்க்கட்சி தலைவர்

Published

on

நாட்டினுடைய வளங்களை துச்சமாக கருதி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கம் , மறுபுறத்தில் அப்பாவிப்பொதுமக்களின் நிலங்கள் சூறையாடுவதனை ஊக்குவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

பாணமவில் உள்ள ராகம்வேல கிராமத்தில் நடைபெற்றுவருவதாக கூறப்படும் நில அபகரிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்றிருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் .

இவையனைத்தும் நாட்டினுடைய பொதுச்சொத்துக்கள் என குறிப்பிட்ட அவர் இவை ஒரு தனி நபருக்கோ அல்லது குழுவுக்கோ சொந்தமானதல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் அதிகாரத்தை வைத்தோ அல்லது பணபலத்தின் மூலமாகவோ இந்தக் காணிகளை எந்தத்தரப்பினை சேர்ந்தவர்களும் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறான செயற்பாடுகளினால் அராசாங்கம் நாட்டை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளியிருக்கின்றது என குற்றம் சாட்டிய அவர் , உரிய சட்டங்களுக்கு மாறாக நடைபெறுகின்ற நிலஅபகரிப்பை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்துள்ளார் .

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version