இலங்கை

பந்துலவிடம் சி.ஐ.டி விசாரணை

Published

on

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் 4 மணிநேர விசாரணை நடைபெற்றுள்ளது.

சதொச நிறுவனத்தில் இரு வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பந்துல விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்கப்பட்டன எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன பொலிஸ்மா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இது குறித்து வர்த்தக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்,

நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் ஊடகங்களுக்கு வெளியிட்ட தகவல்கள் மற்றும் தரவுகள் தொடர்பில் முழுமையான ஆதாரங்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்க அமைச்சர் பந்துல குணவர்த்தன நடவடிக்கை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version