இலங்கை

மஹிந்தவுடனான சந்திப்பு திருப்தி இல்லை! – பங்காளிக் கட்சியினர் கவலை

Published

on

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பு திருப்தியளிக்கவில்லை என அரசாங்கத்தின் பங்காளி கட்சியினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஹெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேற்று மாலை பங்காளிக் கட்சியினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்ற நிலையில், சந்திப்பின்போது இறுதி இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.

ஹெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. தொழிற்சங்கங்களும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை,  பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் நேற்று மாலை சந்தித்து பேச்சு நடத்தினர். சந்திப்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் கலந்துகொண்டிருந்தார்.

இந்தச் சந்திப்பில் பிரதமர் நடுநிலை வகித்திருந்தார். எமது தரப்பு கருத்தை முன்வைத்தோம். ஜனாதிபதியையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளோம் என என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version