இலங்கை

ஹெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவுக்கு?

Published

on

ஹெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவுக்கு?

ஹெரலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசுடன்ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் இயற்கை திரவ வாயு முனையம் நிர்மாணித்தல் மற்றும் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் வரை குழாய் கட்டமைப்பை அமைத்தல் ஆகியவை உள்ளடங்குகின்றன என அமெரிக்க நிறுவனம் பகிரங்கப்படுத்தியுள்ளது.

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் ஏற்கனவே 310 மெகாவோட் கொள்ளளவை கொண்டிருக்கின்றது.

2023 ஆம் ஆண்டளவில் மேலதிகமாக 700 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என அந் நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் விரைவில் மின்சக்தி அமைச்சர் நாடாளுமன்றில் அறிவிப்பார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version