இலங்கை

‘மது கொத்தணி’ – மக்கள் அச்சம்!

Published

on

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் மதுபான நிலையங்கள் அனுமதி வழங்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

மதுபான நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது என அறிவித்தல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து  மதுப்பிரியர்கள் எவ்வித சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றாது முண்டியடித்துக் கொண்டு மது வாங்க மதுபானசாலைகள் முன் திரள்கின்றனர்.

மக்களின் இந்த செயற்பாடுகள் காரணமாக நாட்டில் மதுபான கொரோனாக் கொத்தணி உருவாகும் வாய்ப்பு உள்ளது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மதுபானசாலைகளில் கடமையில் இருக்கும் பொலிஸார் ஒரு மீற்றர் இடைவெளியை பின்பற்றுமாறு கட்டளை இட்டும் பொதுமக்கள் அவற்றை கடைப்பிடிக்காது செயற்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் கொரோனாப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மதுக்கடைகள் திறக்க அரசால் எடுக்கப்பட்ட இது தீர்மானமானது நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன,

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version