இலங்கை
புலிகள் அமைப்பை தமிழர் ஏற்கவில்லை! – வாசுதேவ
புலிகள் அமைப்பை தமிழர் ஏற்கவில்லை! – வாசுதேவ
பெரும்பாலான தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.
இவ்வாறு நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு முறையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு விவாதம் இடம்பெறுகிறது.
இராணுவத்தினர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை, விடுதலைப் புலிகள் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை.
இலங்கை விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவை ஒருதலைப் பட்சமாக செயற்படுகின்றது. ஐக்கிய நாடுகள் பேரவையின் தீர்மானங்கள் நடுநிலையாகக் காணப்பட வேண்டும்.
விடுதலைப்புலிகள் அமைப்பை பெரும்பாலான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பினரால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
புலம்பெயர் அமைப்புக்கள் தங்களின் தேவைக்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை சாதகமாக பயன்படுத்துகின்றன.
நாட்டில் போர் முடிவுற்றபின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தரப்பால் இடம்பெறும் குற்றங்களை அரசின் சர்வாதிகார போக்கு என கருத முடியாது – என்றார்.
You must be logged in to post a comment Login