இலங்கை

நீண்டநேர மாஸ்க் பாவனை! – கறுப்பு பூஞ்சை தொற்று அபாயம்!

Published

on

நீண்டநேர மாஸ்க் பாவனை! – கறுப்பு பூஞ்சை தொற்று அபாயம்!

இலங்கையில் கறுப்பு பூச்சை தொற்று பரவும் ஆபத்துக்கள் அதிகம் உள்ளன என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீண்டநேரமாக முகக்கவசம் அணிவதன் காரணமாக இந்த நோய்த் தொற்று ஏற்படுகிறது எனவும் எச்சரித்துள்ளனர்.

நாட்டில் கறுப்பு பூஞ்சை நோயில் பாதிக்கப்பட்ட சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.  ஆயினும் கொரோனாத் தொற்றுக்கும் கறுப்பு பூஞ்சை தொற்றுக்கும் நேரடி தொடர்புகள் இல்லை.

தற்போது கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நோயாளியின் மூக்கின் உட்புறத்திலும் ஒரு கண்ணிலும் கறுப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளது. அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே முகக்கவசத்தை நீண்ட நாள்கள் அணிதல் மற்றும் சுத்தமற்ற முகக்கவசங்களை அணிதல் போன்ற செயற்பாடுகள் காரணமாக இந்த கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகின்றது என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version