இலங்கை

கொரோனா ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு!!

Published

on

கொரோனா ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு!!

கொரோனாத் தொற்று ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுவாச நிபுணர் மருத்துவர் துஷார கலபட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாத் தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டோரில் 5 முதல் 10 வீதமானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தொற்று ஏற்பட்டு குணமாகி சில வாரங்களின் பின்னர் சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தலைவலி, உடல்வலி, இருமல், தூக்கமின்மை மற்றும் ஞாபகமறதி போன்ற அறிகுறிகள் பலருக்கு ஏற்படுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான அறிகுறிகள் ஏற்படுவோருக்கு அரச மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு பிந்தைய கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நீடித்தால் மருத்துவமனைகளின் சுவாசப்பிரிவு மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வது சிறந்தது – என்றார்.

Exit mobile version