இலங்கை

மலிக் பீரிஸூக்கு சீனாவால் ‘எதிர்கால அறிவியல் பரிசு’ விருது

Published

on

மலிக் பீரிஸூக்கு சீனாவால் ‘எதிர்கால அறிவியல் பரிசு’ விருது.

இலங்கை விஞ்ஞானி பேராசிரியர் மலிக் பீரிஸூக்கு 2021ஆம் ஆண்டுக்கான ‘எதிர்கால அறிவியல் பரிசு’ விருது வழங்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் மலிக் பீரிஸ் மற்றும் சீன பேராசிரியர் யூன் குவோக்யுங் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது என இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இவரின் சார்ஸ் மற்றும் மெர்ஸ் ஆய்வுக்காக பேராசிரியர் மலிக் பீரிஸ் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு பெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

பேராசிரியர் மாலிக் பீரிஸ் இலங்கை நோயியல் நிபுணர் மற்றும் விஞ்ஞானியும் ஆவார்.

அவர் நீண்ட காலமாக ஹாங்காங்கில் வசித்து வருகின்றார். அவரது ஆராய்ச்சி ஆர்வங்களில் சுற்றுச்சூழல், பரிணாமம், நோய்க்கிருமி உருவாக்கம், விலங்கு-மனித இன்ஃப்ளூயன்ஸாவின் தொற்றுநோய் மற்றும் பிற மனித சுவாச வைரஸ் தொற்றுக்கள் ஆகியவை அடங்கும்.

இவர் இதுவரை 320 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி வெளியீடுகளை வெளியிட்டுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version