இலங்கை
வடக்கிலும் ஆட்டத்தை ஆரம்பித்தது டெல்டா – வவுனியாவில் 50 பேருக்கு தொற்று!
நாட்டில் வேகமாக பரவிவரும் டெல்டா வைரஸ் தொற்று தற்போது வவுனியா மாவட்டத்திலும் பதிவாகியுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் பரவலாக கொரோனா பரிசோதனைகள் வரும்நிலையில், அண்மையில் பெறப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை அறிக்கைப்படி 50 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் 4 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் அவற்றின் முடிவுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் 50 பேர் டெல்டா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த முடிவுகளின்படி வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேரும் செட்டிக்குளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேரும் ஏனைய பிரிவுகளில் தலா 5 பேருமாக 50 பேர் டெல்டா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: எகிறும் டெல்டா - 199 மாதிரிகளில் 113 பேருக்கு தொற்று உறுதி! - தமிழ்நாடி.com