இலங்கை

10 மில்லியன் செலவில் ஊரியான் குளம் புனரமைப்பு!

Published

on

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள ஊரியான் குளத்தின் புனரமைப்பு பணிகள் நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 10 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊரியான் குளத்தின் கீழ் 300 ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்கள் காணப்படுகின்றன.

குறித்த குளத்தின் அணைக்கட்டு மற்றும் வான்பகுதி என்பவை சேதமடைந்து புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டன.

குளத்தை புனரமைத்துத் தருமாறு விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளை அடுத்து நீர்ப்பாசன அமைச்சின் ஏற்பாட்டில் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டிய குளங்கள் மற்றும்  நீர்த்தேக்கங்கள் என்பவை புணரமைப்புக்காக தெரிவுசெய்யப்பட்டன.

நீர்ப்பாசன பிரதி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்தக் குளம் தெரிவுசெய்யப்பட்டது.

சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் குளத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தால் குறித்த வேலைத்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வை. தவநாதன் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version