இலங்கை
வீடுகளில் இருந்து சிகிச்சை பெறுவதே இறப்புக்கு காரணம் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி
வீடுகளில் இருந்து சிகிச்சை பெறுவதே இறப்புக்கு காரணம் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி
கொரோனாத் தொற்றாளிகள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதில்லை என்பது பெரிய குறைபாடு ஆகும் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிக காய்ச்சலோடு சேர்த்து ஏனைய நோய்நிலைமை இருக்கும்போது கட்டாயமாக மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சில பேர் வீடுகளில் இருந்துகொண்டு தங்களுக்கு தாங்களே சிகிச்சை வழங்கிக்கொண்டு இருந்தாலும் அனைவரும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது மிகவும் சிறந்தது.
தொற்று ஏற்பட்ட பின்னர் மூன்று, நான்கு நாள்களுக்குப் பின்னர் நியூமோனியா காய்ச்சல் ஏற்படும் வாய்ப்புள்ளது, தங்களைத் தாங்கள் பார்த்துக்கொண்டாலும் சில நாள்களுக்குப் பின்னர் நோய் நிலைமை அதிகரித்து சென்று உடல் செயலிழப்பும் ஏற்படும்.
சில சமயங்களில் இவ்வாறு தாமதித்து வருவதால் அவர்களைக் காப்பாற்ற முடியாத நிலைமை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login