இலங்கை
நாட்டில் 10,000 கடந்தது கொவிட் சாவு – தொற்று : 2,564
நாட்டில் 10,000 கடந்தது கொவிட் சாவு – தொற்று : 2,564
நாட்டில் மேலும் 189 கொவிட் இறப்புகள் இன்று பதிவாகியுள்ளன.
இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10, 140 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் கொரோனாத் தொற்றாளர்களாக 2 ஆயிரத்து 564 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 62 ஆயிரத்து 023 ஆக அதிகரித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 557 ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login