செய்திகள்
அரசாங்கமும் அமைச்சரவையும் எதற்கு?- கேள்வியெழுப்புகிறது ஐ.ம.ச!!
வர்த்தகர்கள் தாம் விரும்பிய விலைக்கு பொருள்களை விற்பனை செய்வார்களாயின் அரசாங்கமும் அமைச்சரவையும் எதற்கு? என என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், அத்தியாவசிய பொருள்களின் விலை சடுதியாக அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தூங்கிக் கொண்டிருக்கிறது.அத்துடன், நாட்டில் இதே நிலைமை தொடருமாயின் கொவிட் தொற்றால் மாத்திரமின்றி மக்கள் பட்டினியால் சாகும் நிலைமையும் ஏற்படும்.
தற்போது ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விலைகளில் சீனி விற்பனை செய்யப்படுவது எவ்வாறு?
வரிகுறைப்பின்போது இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் விலை எதற்காக சரமாரியாக அதிகரிக்கப்படுகிறது? வரி சலுகையின் மூலம் நுகர்வோருக்கு நன்மை கிடைத்ததா? நாட்டில் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றபோது நுகவர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நித்திரையிலுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login