இலங்கை
எகிறுகிறும் வாழ்க்கைச் செலவு – சீனி, பருப்பு விலை அதிகரிப்பு
எகிறுகிறும் வாழ்க்கைச் செலவு – சீனி, பருப்பு விலை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி மற்றும் சிவப்பு பருப்பு உள்ளிட்ட மேலும் சில பொருள்களின் விலைகள் ஒரு வாரத்துக்குள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தற்போது சிவப்பு பருப்பு கிலோவொன்றின் மொத்த விற்பனை விலையானது 180 ரூபாவாகவும், வெள்ளை சீனி கிலோவொன்றின் மொத்த விற்பனை விலையானது 140 ரூபாவாகவும் காணப்படுகின்றது. சிவப்பு பருப்பு ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில், சர்வதேச சந்தையில் தற்போது விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக உள்நாட்டு சந்தையிலும் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. எவ்வாறாயினும், சீனி இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் உள்நாட்டு சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது என அத்தியாவசிய பொருள்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login