இந்தியா

மதுரவாயல்: லொறி ஏறி தந்தை கண்முன்னே இரண்டு மகன்களும் உயிரிழப்பு

Published

on

 

மதுரவாயல் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து சாலையில் தவறி விழுந்ததில் அவ்வழியாக வந்த லொறி ஏறி, தந்தை கண்முன்னே இரண்டு மகன்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்களை சபரிமலை கோவிலுக்கு வழியனுப்பிவிட்டு வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆவடியை சேர்ந்தவர் செல்வம்(36), டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமலதா(29), இவர்களுக்கு ஆதிரன்(4),கவுசிக்(2), மற்றும் ஒரு கைக்குழந்தையும் உள்ளது. இவர்களது உறவினர்கள் இருமுடி அணிந்து சபரி மலைக்கு செல்வதால் மகாலிங்கபுரத்தில் உள்ள கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று அவர்களை கோவிலுக்கு வழியனுப்பி விட்டு வீட்டிற்கு செல்வதற்காக திரும்பினார்கள்.

இதில் அனைவரும் காரில் வருவதற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில்  சங்கர் மட்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு செல்வதாக கூறியதையடுத்து அவரது இரு பிள்ளைகளும்இ தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டனர். இரண்டு மகன்களையும் செல்வம் மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேரும் சாலையில் நிலை தடுமாறி விழுந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லொறி ஒன்றுஇ செல்வத்தின் மகன்கள் ஆதிரன், கவுசிக் மீது ஏறியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். செல்வத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டதால் வலியாலும் தன் கண் முன்னே இரண்டு மகன்கள் இறந்த போனதை கண்டு கதறி அழுதார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் செல்வத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்கு காரணமான லொறிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் முறையாக பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் விபத்து குறித்த காட்சிகளும் கேமராவில் பதிவாகவில்லை.

#indianews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version