இந்தியா

பெண் பூப்படைந்தவுடன் திருமணத்தை செய்ய வேண்டும்: எம்.பி. சர்ச்சைப் பேச்சு

Published

on

பூப்பெய்தியவுடன் பெண்ணை மணம் முடித்து வைக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒப்புதல் வழங்கியிருந்தது.

இந்தநிலையில் இதுகுறித்து கருத்துரைக்கையிலேயே சமாஜ்வாதி கட்சி எம்.பி. சயது துபெய்ல் ஹசன் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்,

வயதுக்கு வந்த உடன் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். வயதுக்கு வந்த பெண் 16 வயதில் திருமணம் செய்துகொண்டாலும் தவறில்லை.

பெண் 18 வயதில் வாக்களிக்கும்போது ஏன் அதேவயதில் திருமணம் செய்துகொள்ளக்கூடாது?.

ஒரு பெண் கருவுற்றல் வயதையடைந்ததும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நான் நம்புகிறேன் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மற்றொரு சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஷபீக்கியூர் ரஹ்மான், பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 21 என அதிகரிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஹ்மான் கூறுகையில்,

இந்தியா ஒரு ஏழை நாடு. அனைவரும் தங்கள் மகள்களை குறைவான வயதிலேயே திருமணம் செய்துவைக்க நினைக்கின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த பிரேரணையை ஆதரிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக அதிகரித்து, பிரேரணை தாக்கல் செய்யப்பட்டு, அது சட்டமாக நிறைவேற்றப்படவுள்ள நிலையில், பல்வேறுபட்ட சர்ச்சைக் கருத்துக்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

#IndiaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version