இந்தியா

அரச உதவியைப் பெற, சொந்த சகோதரியை திருமணம் செய்த நபர்!

Published

on

உத்தர பிரதேசத்தில் அரசு திட்டத்தின் கீழ் வரும் பணத்தைப் பெறுவதற்காக நபர் ஒருவர் தனது பெற சொந்த சகோதரியையே திருமணம் செய்துள்ளார்.

உத்தர பிரதேசம் – பெரோசாபாத் மாவட்டம் டுயுன்லா பகுதியில் கடந்த 11 ஆம் திகதி 51 தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
இத்திருமணம் செய்துகொண்ட தம்பதிகளில் விபரங்கள் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டது.

அப்போது, ஒரு தம்பதியின் புகைப்படத்தை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு நபர் தனது சொந்த சகோதரியையே திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதனை அப்பகுதி கிராம மக்கள் அடையாளம் கண்டு அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்
அரசு திட்டத்தின் கீழ் கிடைக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சொந்த சகோதரியையே திருமணம் செய்தமை அம்பலமானதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருமணத்தின் போது அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களும் திரும்பப்பெறப்பட்டுள்ளன. இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் மற்றும் அவரது சகோதரியின் பெயர்களை அதிகாரிகள் தரப்பில் வெளியிடவில்லை.

இதேவேளை உத்தர பிரதேசத்தில் சமூக நலத்துறை சார்பில் ஏழை, எளியோருக்கு மாநில அரசு சார்பில் திருமணம் செய்து வைக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும். இதில், 20 ஆயிரம் ரூபாய் நேரடியாக மணப்பெண்ணின் வங்கிக்கணக்கில் அரசு சார்பில் செலுத்தப்படும். எஞ்சிய தொகை பணமாகவும், பரிசுப்பொருட்களாகவும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பணத்தைப் பெறுவதற்காகவே சகோதரியை திருமணம் செய்துள்ளார்.

#IndiaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version