இந்தியா

பள்ளிகளை திறக்க கேரள அரசு அனுமதி

Published

on

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  மூடப்பட்ட பள்ளிகளை திறப்பது குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில்  நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வரும் 18-ம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பயிற்சி பள்ளிகள் திறந்து நேரடியாக வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் கட்டாயம் இரண்டு டொஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது .

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version