இந்தியா

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீடிப்பு – நீதிபதியிடம் கூறிய பதில்

Published

on

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் வலியுடன் இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழகத்தின் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்றுடன் 14 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

12ம் திகதி வரை நீதிமன்ற காவல்

இன்று நிறைவடையவுள்ள நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் திகதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வலியுடன் இருக்கிறேன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் முன்னிலைப்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி எப்படி இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் வலியுடன் இருப்பதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version