உலகம்

ஆஸ்கார் விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் மரணம்!

Published

on

திரையுலகைப் பொறுத்தவரையில் பல உயிரிழப்புக்கள் அடுத்தடுத்து நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது ஒரு இசையமைப்பாளர் மரணமடைந்துள்ளார்.

அதாவது பிரபல ஜப்பானிய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ரியுச்சி சகாமோட்டோ. இவர் ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் 1987-இல் வெளியான ‘தி லாஸ்ட் எம்பரர்’ படத்துக்கு இசையமைத்தமைக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கார் விருதை வென்று சாதனை படைத்திருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது ‘மேரி கிறிஸ்துமஸ், மிஸ்டர் லாரன்ஸ்’ படத்துக்கு இசையமைத்தமைக்காக பாப்டா விருதையும் வென்றிருக்கின்றார். அத்தோடு கிராமிய விருதும் பெற்றுள்ளார். மேலும் ஏராளமான படங்களுக்கு பின்னணி இசையமைத்ததோடு இசை ஆல்பங்களும் வெளியிட்டு உள்ளார்.

இந்நிலையில் ரியுச்சி சகாமோட்டோவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

#world

Exit mobile version