இந்தியா

சர்வதேச கடல் எல்லையில் இந்தியா- இந்தோனேஷியா படைகள்

Published

on

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளுடன் இணைந்து, சர்வதேச கடல்சார் பாதுகாப்பை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அனைத்து பிராந்தியங்களிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இந்தியா – இந்தோனேஷியா கடற்படைகள் ஒருங்கிணைந்த ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி கடந்த 8ம் தேதி தொடங்கியது. வரும் 19ம் திகதி வரை நடைபெறும் இந்த ரோந்து பணியின்போது, கடல் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடிப்பு, போதைப்பொருள் கடத்தல், கடல்சார் தீவிரவாதம், ஊடுருவல், போன்றவற்றைத் தடுத்து நிறுத்தும் பணியில் இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

மேலும், கடற்கொள்ளையர்கள் மற்றும் சட்டவிரோத அகதிகள் குடியேற்றம் ஆகியவற்றைத் தடுக்கவும் இந்த ரோந்து பணி உதவிகரமாக இருக்கும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கடல்சார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நடைபெற்று வரும் இந்த பணியில் இந்தியா சார்பில், உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட கடற்படை கப்பலான ஐஎன்எஸ் கர்முக், எல்-58 கப்பல் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்படுகின்றன. இந்தோனேஷியா சார்பில் கேஆர்ஐ கட் நியாக் டைன், கபிடன் படிமுரா கிளாஸ் கேர்வீட் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version