இந்தியா
இரட்டை கோபுரங்கள் தகர்ப்பு!
டில்லி அருகே நொய்டாவில் உள்ள Supertech இன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இரட்டைக் கோபுரங்கள் பாதுகாப்பாக நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு வெடிமருந்து வைத்து தகர்ப்பட்டது.
அதில் அபெக்ஸ் (32 மாடிகள்) மற்றும் செயேன் (29 மாடிகள்) கோபுரங்கள் இடிந்து விழுந்தன.
வெடிபொருள் நுட்பத்துடன் தகர்கப்பட்டதில் 3700 கிலோவிற்கு அதிகமாக வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டது. இதில் 55000 தொன் குப்பைகள் அகற்றப்படும். இந்த இரண்டு கோபுரங்களிலும் 94,000 துளைகளை தோண்டி சார்ஜ் செய்யப்பட்ட வெடிபொருட்கள் டைனமைட், குழம்புகள் மற்றும் பிளாஸ்டிக் வெடிபொருட்களால் தகர்க்கப்பட்டது.
கட்டட இடிப்பின் மூலம் குவியும் 55 ஆயிரம் டன் கட்டட இடிபாடுகளை அகற்ற சுமார் 3 மாதங்கள் ஆகும் என தெரிகிறது. கிட்டத்தட்ட 3000 லொறி கட்டட இடிபாடுகள் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தில் 915 வீடுகள், 21 கடைகள் கட்டப்பட்டன. இந்த கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் அலகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இரட்டை கோபுர கட்டிடத்தினை இடிக்க உத்தரவிட்டது.
இதேவேளை அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் மாலை 7 மணிக்குப் பிறகு வீடுகளுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login