இந்தியா

உலக தமிழர்களின் தாய் வீடு தமிழ் நாடே! – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

Published

on

உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாடு தான் தாய் வீடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்கா தமிழ் சங்கப் பேரவை ஆண்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவிக்கையில்,

“உலகம் முழுவதும் வாழும் இனம் தமிழினம். உலகின் மிக மூத்த மொழியான தமிழ் மொழிக்கு சொந்தக்காரர்கள் நாம். உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாடு தான் தாய் வீடு.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தது திமுக அரசு. இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ்நாட்டில் இருந்து தான் எழுதப்பட வேண்டும். தமிழுக்கு பழம்பெருமை இருப்பதால் அதுகுறித்து பேசுகிறோம். அவர்களுக்கு பேச எந்த பெருமையும் இல்லை.

வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தை திமுக அரசு உருவாக்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் குறு தொழில் செய்ய மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்து தமிழகத்திற்கு உதவி செய்ய வேண்டும்.

1938 முதல் இன்று வரை தமிழ் காப்பு போராட்டங்கள் திமுகவால் நடத்தப்பட்டன. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். இரு மொழிக் கொள்கையை நிறைவேற்றியது திமுக அரசு தான். தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது திமுக அரசு தான். தமிழுக்கு பழம்பெருமை இருப்பதால் அதுகுறித்து பேசுகிறோம்.

அவர்களுக்கு பேச எந்த பெருமையும் இல்லை. தமிழர்களை பிளவுப்படுத்தும் கருவியாக மதத்தை பயன்படுத்துகிறார்கள். தமிழினத்தை மேம்படுத்தும் எண்ணத்தோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் என்ற கோட்பாடாக திராவிட ஆட்சி உள்ளது” – என்றார்.

#IndiaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version