இந்தியா
100 கோடி நிதி நெருக்கடி! – தமிழக அரசிடம் உதவி கோரும் பல்கலைக்கழகம்
இந்தியாவின் மிகப்பழமையான 3 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குவது சென்னை பல்கலைக்கழகம்.
1857-ம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் சென்னை – மெரினா கடற்கரைக்கு எதிராக கம்பீரமாக தோற்றமளிக்கிறது. 153 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் இந்தியாவின் பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது.
தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு தாய் பல்கலைக்கழகம் என்ற பெருமையுடன் திகழும் சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டணம் இந்தியாவிலேயே மிகக் குறைவு என்ற பெருமையையும் கொண்டது.
பல்வேறு சிறம்பம்சங்களைக் கொண்ட இந்த பல்கலைக்கழகம் தற்போது தவறான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தொகை, பேராசிரியர்களுக்கானசம்பளம் ஆகியவற்றுக்கே பெரும்பாலான நிதி செலவிடப்படுகிறது எனவும், தற்போது புதிய பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்து வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 100 கோடி நிதி பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள சென்னை பல்கலைக்கழகம் தமிழக அரசிடம் ரூ.88 கோடி சிறப்பு நிதி உதவியை கோரி உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#IndiaNews
You must be logged in to post a comment Login