இந்தியா

வேகமாகப் பயணிக்கின்றது இந்தியா! – மோடி பெருமிதம்

Published

on

பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி இந்தியா வேகமாகப் பயணித்து வருகின்றது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் இன்று அவர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி இந்தியா வேகமாகப் பயணித்து வருகிறது. கனவை நனவாக்க மிகப்பெரிய அளவில் இந்தியவர்கள் சிந்தித்து உழைத்து வருகின்றனர்.

* 400 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டிய இந்திய ஏற்றுமதிகள் நம்மை பெருமைப்பட வைத்துள்ளது. இது நாட்டின் ஆக்கத்தையும், திறனையும் குறிக்கின்றது.

* இந்தியாவில் இருந்து புதிய தயாரிப்புகள் புதிய இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்திய தயாரிப்புகள் இப்போது வெளிநாடுகளில் அதிகம் கவனத்தைப் பெற்றுள்ளன.

* நமது விவசாயிகள், இளைஞர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை நான் பாராட்டுகின்றேன்.

* பெரிய நிறுவனங்கள் மட்டுமே அரசுக்குப் பொருட்களை விற்க முடியும் என்று முன்பு நம்பப்பட்டது. ஆனால் இ – மார்க்கெட் இணையதளம் இதை மாற்றியுள்ளது. இது இந்தியாவின் புதிய உத்வேகத்தை விளக்குகிறது.

* சமீபத்தில் முடிவடைந்த பத்ம விருதுகளில், பாபா சிவானந்தாவைப் பார்த்திருப்பீர்கள். அவருடைய வீரியம் மற்றும் உடற்தகுதியைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். நாட்டில் அவரது உடல்நிலை விவாதப் பொருளாக உள்ளது. அவர் யோகாவில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

* சமீபத்திய ஆண்டுகளில் ஊக்கமளிக்கும் போக்குகளில் ஒன்று, ஆயுஷ் துறையில் பல ஸ்டார்ட் அப்கள் மற்றும் நிறுவனங்களின் எழுச்சி மற்றும் வெற்றியாகும்.

* ஏக் பாரத், ஸ்ரேஷ்டா பாரதத்தின் உணர்வின் வெளிப்பாடான குஜராத்தின் கடலோரப் பகுதியில் நடக்கும் கண்காட்சியைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்.

* டாக்டர் அம்பேத்கருடன் தொடர்புடைய பஞ்ச தீர்த்தங்களுக்குச் சென்றதை நான் பெருமையாக உணர்கின்றேன். இந்த எழுச்சியூட்டும் இடங்களைப் பார்வையிடுமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

* பெண் குழந்தைகளின் கல்வியை மேலும் மேம்படுத்தி, பெண்கள் அதிகாரத்தை வலுப்படுத்துவோம்.

– இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

#IndiyanNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version