செய்திகள்

“எதிரணியின் போராட்டத்தால் அரசுக்குப் பாதிப்பே இல்லை”

Published

on

“கொழும்பில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களால் அரசுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“கொரோனா நெருக்கடியுடன் தொடர்புடைய பல காரணிகளால் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைந்தது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் துயரமடைந்துள்ள போதிலும், நல்லாட்சி அரசுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்க மக்கள் தயாராக இல்லை.

எதிர்க்கட்சியில் இருந்தபோது எமது குழுவினரும் இதுபோன்ற இலட்சக்கணக்கான போராட்டங்களை நடத்தினர். இதனால் எதிர்க்கட்சிகள் பிழைப்பதே தவிர மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை .

தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு ஜனாதிபதியும் நிதி அமைச்சரும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் பிணங்களை வைத்து பிழைப்பு நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் பலர் இருக்கின்றனர். அரசு வழங்கும் வரிச்சலுகையைப் பயன்படுத்தி அவர்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

அரசிடம் இருந்து வரிச்சலுகை பெற்று, அதன் பலனை மக்களுக்கு வழங்காத இந்தத் தொழிலதிபர்கள், மக்களுக்குப் பூச்சாண்டி காட்ட முயல்கின்றனர்” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version