செய்திகள்

ஆட்சியாளர்களை விரட்டியடிக்க மக்கள் பெரும் போராட்டத்துக்குத் தயார்! – மைத்திரி பகிரங்க அறிவிப்பு

Published

on

“வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைத் தாங்க முடியாத மக்கள் ஆட்சியாளர்களை விரட்டியடிக்க மாபெரும் போராட்டத்துக்குத் தயாராகுகின்றனர்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதுளை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று இந்த நாடு உணவு உட்பட பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்புடன் மக்கள் ஆட்சியாளர்களை நிராகரித்து வெகுஜனப் போராட்டங்களை நாடுகின்றார்கள்.

13 கட்சிகள் இணைந்து இந்த அரசை அமைத்தபோது நானும் தலைவராக நியமிக்கப்பட்டேன். ஆனால், அதன் பின்னர் நான் எதிலும் ஈடுபடவில்லை.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தின் பின்னர் எனது நல்லாட்சிஅரசு மாத்திரமே இந்த நாட்டுக்குச் சரியான கொள்கையைக் கொண்டு வந்தது.

நான் நாட்டை ஜனநாயக ரீதியில் வழிநடத்தினேன். உலக நாடுகள் அனைத்தும் எனக்கு உதவின.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டினேன்.
ஆனால், ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவேன் என்று எதிர்பார்த்தபோதும் என்னால் அதைச் செய்ய முடியவில்லை” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version