செய்திகள்

தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் மூலம் 22 மில்லியன் தரவுகளுக்கு பாதுகாப்பு! – நீதியமைச்சர்

Published

on

தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களின் தரவுகள் பாதுகாக்கப்படும் என்று நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மேற்படி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தெற்காசிய பிராந்தியத்தில் முதலாவதாக இந்த சட்டத்தை நிறைவேற்றிய நாடு என்ற பெருமை எமக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தமது சேவைகளை மிக இலகுவாக பெற்றுக்கொள்ள இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

” தரவு அதிகாரசபை தொடர்பிலும் அதன் தகுதி, தகைமை தொடர்பிலும் சபையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி சுமந்திரனும் சில கருத்துக்களை முன்வைத்தார். உண்மையில் கடந்த அரசாங்கத்தில் நீங்கள் சரியாக செயற்பட்டிருந்தால் பயங்கரவாத தடைச்சட்டம் கூட கொண்டுவரப்பட்டிருக்காது.

ஊடகவியலாளர்களின் உரிமை தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நாட்டு மக்களின் உரிமை, மக்களுக்கான கருத்து சுதந்திரம் என்பது எல்லாம் ஒன்றுதான். ஊடகத்திற்கு என தனியான சுதந்திரம் கிடையாது, ஊடகவியலாளர்கள் சரியானதை தெரிவிக்க வேண்டும்.தேவையில்லாதவற்றுக்கு மட்டுப்படுத்தல்கள் மிக அவசியமானது. அனைத்திற்கும் சுதந்திரத்தை வழங்க முடியாது.” – என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version